இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக நிறுவனர் இராமதாச் மக்களிடம் உரையாற்றுகையில் மக்கள் நலனுக்காக போராடும் ஒரே தலைவன் நான் தான் என்று கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களாக கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நேற்று நல்லம் பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தேவர், ஊத்துப்பள்ளம், சுன்மாரிக் கொட்டாய், பாலஜங்கமன அள்ளி, சவளூர், கெங்லாபுரம், பச்சியப்பன் கொட்டாய், மேட்டுக் கொட்டாய், கீழ் கொட்டாவூர், மேல் கொட்டாவூர் உள் ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். தேவர் ஊத்துப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் காண பாடுபட்டு வருகிறேன்.
தமிழகத்தில் மக்களின் நலனுக்காக பேராடும் ஒரே தலைவன் இந்த ராமதாசு தான். இந்த நாட்டில் உள்ள ஆண்கள் குடித்துவிட்டு வீட்டில் பெண்களை அடிப்பதும், வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதும் தான் பொழுது போக்காக வைத்திருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. பா.ம.க.வை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.
Thursday, 25 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//நீங்கள் அனைவரும் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு சாராயம் கூட தமிழ்நாட்டில் இருக்காது. பா.ம.க.வை அனைவரும் ஆதரிக்க வேண்டும் //
சுத்தம், இப்படி பேசி ஒட்டு வாங்கினால் பா.ம.க. ஆட்கள் கூட இவருக்கு ஒட்டு போட மாட்டார்கள்.அது சரி, பெண்கள் எவருமே குடிப்பதில்லை ( நகரோ ,பட்டிகாடோ) என்ற எண்ணத்தில் இவர் இருக்கிறார் போல. நாட்டு நடப்பு தெரியாதவர் இப்படித்தான் பேசுவார்.
Post a Comment