Wednesday 24 February 2010

இந்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.இவர் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பாக பேசிய மம்தா கூறுகையில் : மக்கள் தொடர்பு சாதனம் அரசுக்கு மிக முக்கியமானது , ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சி மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ரயில்வே தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. வர்த்தக ரீதியாக முன்னேற்றம் காண வேண்டிய நேரத்தில் இருக்கிறோம் என்றார். ரயில்வே துறை நுழைவுத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி, உருது மொழிகளிலும் நடத்தப்படும். அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ரயில் முன் பதிவில் விதிக்கப்படும் சேவைக் கட்டணம் ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ஏசி பெட்டிகளுக்கான சேவைக் கட்டணம் ரூ. 20 குறைக்கப்பட்டுள்ளது. அதே போல உணவு தானியங்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ஒரு பெட்டிக்கு ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.புதிதாக 117 ரயில்கள் வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் துவக்கி வைக்கப்படும். * ரயில்வே துறைக்கு 10 ஆயிரம் கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்.* விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு உதவிகள் செய்யப்படும். * பயணிகள் வசதி பெருக்கிட ஆயிரத்து 302 கோடி ஒதுக்கப்படுகிறது* ரயிலில் மளிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் *காமன்வெல்த் போட்டிக்குசிறப்பு ரயில்கள் * ரயில்வே துறை நுழைவுத்தேர்வு ஆங்கிலம், உருது, இந்தி தமிழ் உள்ளிட்ட மாநில மொழியிலும் நடத்தப்படும் * டபுள் டக்கர் ரயில் அறிமுகம்* சரக்கு கட்டணம் உயராது*ரயில்வே ஊழியர்களுக்கு புதி சலுகை திட்டங்கள்* மும்பையில் 101 புறநகர் ரயில்கள் விடப்படும்*80 ஆயிரம் புதிய வாகன்கள் வாங்கப்படும்*‌ ‌மொபைல் இ.டிக்கெட் சென்டர்கள் ஆஸ்பத்திரி, பல்கலை., வளாகம் கோர்ட், பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

0 comments: