இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அண்ணா நகர் கிழக்கு கே-4 போலீஸ் நிலையம் அருகில்  உள்ள ராயல் என்கிளவ்  என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்  வன்னிய சம்பத் (வயது 40). இவர்  எழும்பூர் மெட் ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பயிற்சி வக்கீலாக  பணிபுரிந்து வந்தார். 
பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினரான இவர் பா.ம.க. வக்கீல் அணியில்  முக்கிய அங்கம் வகித்தார். வன்னியர் சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும்  இவர் மத்திய சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளராகவும் பணி  புரிந்து வந்தார். 
இவரது முதல் மனைவி உடல் நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு  முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் நளினி என்ற பெண்ணுடன் குடும்பம்  நடத்தி வந்தார். 
அவருக்கு செந்தில், சஞ்சய்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்கள்  இருவரும் பள்ளி படிப்பை படித்து வருகிறார்கள். இளைய மகன் சஞ்சய்குமார்  அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உள்ள பாரத் வித்யாபவன் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். 
அவனை தினமும் வன்னிய சம்பத்தான் தனது மோட்டார்  சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். 
வழக்கம் போல இன்று காலை அவர் சஞ்சய் குமாரை தன்  மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அயனாவரம் நோக்கிச் சென்று  கொண்டிருந்தார். நியூ ஆவடி 100 அடி சாலைக்கு வந்த அவர் கல்லறைத்  தோட்டத்துக்கு எதிரில் அயனாவரம் செல்லும் பாதையில் திரும்ப முயன்றார்.  அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அவர் மீது மோதினார்கள். 
இதனால் நிலை தடுமாறி வன்னிய சம்பத்தும், சஞ்சய்  குமாரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். மறு நிமிடம் அங்கே  பதுங்கி இருந்த சுமார் 8 பேர் கும்பல் வன்னிய சம்பத்தை சுற்றி வளைத்தது.  பட்டா கத்திகளால் அவர்கள் வன்னிய சம்பத்தை சரமாரியாக வெட்டினார்கள். 
வன்னிய சம்பத் கை, கால், முதுகில் அரிவாள் வெட்டு  விழுந்தது. அவர் அய்யோ அம்மா என்று அலறியபடி ஓட முயன்றார். இதைப்பார்த்து  சஞ்சய்குமார் அப்பா... அப்பா என்று அலறினான். உடனே மர்ம நபர்களில் ஒருவன்  சஞ்சய் குமார் கண்ணைப் பொத்திக் கொண்டான். 
மற்ற 7 பேரும் வன்னிய சம்பத்தை சூழ்ந்து கொண்டு  வெட்டினார்கள். இதில் ஒரு வெட்டு வன்னிய சம்பத் கழுத்தில் விழுந்தது.  இதனால் கழுத்து 80 சதவீதம் துண்டாகித் தொங்கியது. அதன் பிறகு  சஞ்சய்குமாரிடம் வீட்டுக்கு ஓடுடா  என்று சொல்லி விட்டு அந்த மர்மக்  கும்பல் தப்பி ஓடி விட்டது. 
உடல் உறுப்புகள் துண்டு, துண்டாகும் வகையில் வெட்டி  குதறப்பட்ட வன்னிய சம்பத் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தப்படி கிடந்தார்.  அவரை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில்  வன்னிய சம்பத்தின் மூச்சு அடங்கிப் போனது. 
ஆவடி 100 அடி ரோடு எப்போதும் ஆட்கள் நட மாட்டம்  அதிகம் உள்ள பகுதியாகும். இன்று காலை பள்ளிக்கு, அலுவலகத்துக்கு நூற்றுக்  கணக்கானவர்கள் சென்று கொண்டிருந்த நிலையில், மிகத் துணிச்சலாக இந்த படுகொலை  நடந்ததால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 



0 comments:
Post a Comment