Sunday, 24 January 2010

திருக்குறள் மனப்பாடம் சிறுமி சாதனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
காஞ்சிபுரத்தினைச் சேர்ந்தவர்கள் சங்கர்கனிமொழி தம்பதி. இவர்களது ஒரே மகள் கவிப்பிரியா. இவர் காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார்..
.
இவர் திருக்குறளின் எந்த அதிகாரத்தினையோ குறளின் எண்ணினையோ குறிப்பிட்டால் உடனடியாக எந்தவிதமான குறிப்புகளும் இன்றி மனப்பாடமாக ஒப்புவிக்கின்றார். மேலும் குறிப்பிட்ட ஒரு குறளினைச் சொன்னால் அது எத்தனையாவது குறள் மற்றும் அக்குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம் உள்ளிட்டவைகளையும் சரியாகச் கூறுகின்றார். இவரின் திறமையினைப் பாராட்டி செங்கல்பட்டு உலகப் பொது மறை மன்றத்தின் சார்பினில் காஞ்சிபுரத்தில் பாராட்டு தெரிவித்து பரிசளிக்கப்பட்டது

1 comments:

said...

நல்ல நினைவாற்றல் - நல்ல செய்தி - பகிர்ந்தமைக்கு நன்றி