Monday, 25 January 2010

எத்தியோப்பியாவைச் சேர்ந்த விமானம் கடலில் விழுந்தது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் போயிங் 737-800 விமானம் விபத்துக்குள்ளாகி  மத்திய தரை கடலில் விழுந்துள்ளது
இன்று அதிகாலையில், பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய ஐந்து நிமிடங்களில் இந்த விமானம் விபத்தில் சிக்கியது.
விமானம் கிளம்பிய ஐந்து நிமிடத்திலேயே அது ரேடாரின் கண்களிலிருந்து மறைந்தது. விபத்துக்குள்ளான விமானம் போயிங் 737 ரக விமானம் எனக் கூறப்படுகிறது.   85 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் மத்திய தரைக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 85 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் இருந்த பயணிகளில் 50 பேர் லெபனான் நாட்டவர் ஆவர். மற்றவர்கள் எத்தியோப்பியர்கள் எனத் தெரிகிறது. 7 பேர் விமான ஊழியர்கள் ஆவர்.
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு இந்த விமானம் கிளம்பியது.
விமானம் தீப்பிடித்த நிலையில் கடலில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதில் இருந்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.

0 comments: