Thursday, 26 November 2009

சென்னை சுங்க அதிகார்கள் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் சரக்குகளை கோரும் பயணிகளிடமிருந்து குறைந்த கட்டணம் வசூலித்தோ அல்லது சுங்கத் தீர்வையே விதிக்காமலோ சில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக சி.பி.ஐ. லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விமான நிலைய சரக்குப் பிரிவில் அதிரடி சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கு பணியிலிருந்த சுங்க அதிகாரிகள் 9 பேர் உள்பட 11 பேரை கைது செய்தனர். மேலும் ரூ.16 லட்சம் ரொக்கப் பணம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் 9 பேரும் புதன்கிழமை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய சுங்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பார்சல்கள் அதிரடி சோதனை: விமான நிலைய சரக்குப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் 800 பார்சல்களை அதிரடியாக சோதனை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

0 comments: