இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வெளிநாட்டில் மருத்துவம் படிப்போருக்கு இந்தியாவில் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படிப்போர், மருத்துவப் பணியைத் தொடங்குவதற்கு முன் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் 2002-ல் முடிவு செய்தது.
நேபாளத்தில் மணிப்பால் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர், கவுன்சிலின் இந்த முடிவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் பட்டம் பெறுகின்றனர். சில பட்டங்களின் தன்மை கேள்விக்குறியாகி உள்ளதால், வேறு வழியில்லாமல் தகுதித் தேர்வை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இதில் தவறு காண முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இதுபோன்ற விதிமுறைகள் இயற்றப்பட்டுள்ளன என தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
Tuesday, 22 September 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment