இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள உடற் பயிற்சிக் கூடத்தில் கம்ப்யூட்டர் திருடுபோய் விட்டது.டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அதன் வளாகத்தில் உள்ள பகுதிகள் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டவை. இந்த வளாகத்தில் உள்ள அலுவலர்களின் உடற்பயிற்சிக் கூடம், ராணுவ அதிகாரி விக்ரம் தத்தாவின் பொறுப்பில் உள்ளது.
இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் மழைநீர் செல்வதற்கு வசதியாக சில பராமரிப்பு பணி நடந்தது. இதற்காக இந்த கூடத்தின் சாவியை பொதுப்பணித் துறை ஊழியரிடம், விக்ரம் சிங் கொடுத்திருந்தார். பராமரிப்பு பணி முடிந்து, விக்ரம் தத்தாவிடம் சாவி ஒப்படைக்கப் பட்டு விட்டது.
கடந்த 4ம் தேதி இந்த கூடத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டம்பிள்ஸ் எனப்படும் உடற்பயிற்சி சாதனங்களை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.”வெளியாட்கள் இந்த வளாகத்துக்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. உள்ளே இருக்கும் நபர்கள் தான் திருடியிருக்க வேண்டும். இது குறித்து விசாரித்து வருகிறோம்’ என, போலீசார் தெரிவித்தனர்.