Thursday, 24 September 2009

பல கோடி ஊழல் பணம் சிக்கியது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கர்நாடகாவில் ஏழு மாவட்டங்களில், எட்டு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் லோக் ஆயுக்தா நடத்திய ரெய்டில், 11 கோடி ரூபாய் சிக்கியது. ஹாசன், ராய்ச்சூர், பெல்லாரி, பெங்களூரு, பாகல்கோட்டை, குல்பர்கா, கொப்பால் மாவட்டத்தை சேர்ந்த எட்டு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில், நேற்று அதிகாலையில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர. ஹாசன் டவுன் நகராட்சி கமிஷனர் தர்மப்பாவிடம் நடத்திய சோதனையில், ஒரு கோடியே 35 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், ராய்ச்சூர் ஆர்.டி.ஓ., அலுவலக மோட்டார் இன்ஸ்பெக்டர் ஜெயராம் நானப்பா நாயக்கிடம் நடத்திய சோதனையில், ஒரு கோடியே 61 லட்சத்து 63 ஆயிரத்து 900 ஆயிரம் ரூபாயும், பெல்லாரி மாவட்டம் கடஹள்ளி விவசாய துறை அதிகாரி ஆலி ஈஸப்பாவிடம் நடத்திய சோதனையில் 69 லட்சத்து 5,600 ரூபாயும், பெங்களூரு தெற்கு தாலுகா பேகூர் ஹோப்ளி கிராம கணக்காளர் கிருஷ்ணே கவுடாவிடம் நடத்திய சோதனையில், ஒரு கோடியே 63 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாயும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி உதவி போலீஸ் எஸ்.பி., ராஜசேகர் ஹசனப்பா நாயக்கிடம் நடத்திய சோதனையில், 92 லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயும், குல்பர்கா மாநகராட்சி உதவி ரெவின்யூ அதிகாரி சங்கர் கொல்லூராவிடம் நடத்திய சோதனையில், ஒரு கோடியே ஐந்து லட்சத்து 97 ஆயிரம் ரூபாயும், குல்பர்கா மாவட்டம் ஷோராபூரில் அரசு குடோன் மேனேஜர் பண்டாரி மல்லப்பா தொட்லாவிடம் நடத்திய சோதனையில், ஒரு கோடியே 26 லட்சத்து 49 ஆயிரத்து 837 ரூபாயும், ஹொப்பால் ஆர்.டி.ஓ., ஆபீஸ் மோட்டார் வெஹிக்கல் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரப்பாவிடம் நடத்திய சோதனையில், இரண்டு கோடியே 52 லட்சத்து 69 ஆயிரத்து 890 ரூபாயும் சிக்கியது. லோக் ஆயுக்தா ரெய்டில் சிக்கிய எட்டு அதிகாரிகள் வீட்டு மனைகள், வாகனங்கள், தங்க, வெள்ளி நகைகள், வீடுகள், உறவினர் பெயர்களில் சொத்துகள் சேர்த்து வைத்திருப்பது தெரியவந்தது. ஹாசன் நகராட்சி கமிஷனர் தர்மப்பாவிற்கு சொந்தமான சிமோகா பசவேஸ்வரா நகரிலுள்ள ஆடம்பர பங்களா, ஒயிட் ஹவுஸ் போன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களா 11 ஆயிரத்து 250 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களா, இரண்டு மாடிகள் கொண்டது. வீட்டின் உட்பகுதியில், மிக நவீன நீச்சல் குளமும், 20க்கும் மேற்பட்ட அறைகளும் உள்ளன. வீட்டிற்குள் நுழைந்தாலே, அரண்மனையில் நுழைந்தது போன்ற உணர்வு தோன்றும் வகையில் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, இந்த பங்களா பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று லோக் ஆயுக்தா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறக்காம கோபத்தோட ஒரு குத்து குத்திட்டு போங்களேன்

0 comments: