Thursday, 10 September 2009

போலீஸ் அடித்தால் நாங்களும் அடிப்போம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
போலீசார் தாக்கினால், நாங்கள் திருப்பித் தாக்குவோம், என, பா.ம.க.,வின் காடுவெட்டி குரு, தைலாபுரத்தில் நடந்த விழாவில் பேசினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வன்னியர் சங்கத்தில் இணையும் விழா நடந்தது. வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது: ஆரம்ப காலத்தில் நடத்திய சாலை மறியலின் போதே போலீசையும் , ராணுவத்தையும் நேரடியாக சந்தித்தவர்கள் வன்னியர்; ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததால் நாங்கள் அடங்கி உள்ளோம். நாங்கள் அடங்குகிற கட்சியல்ல. அடங்கி வாழுகிற ஜாதியல்ல. ஆரம்பத்தில் எங்கள் கட்சியை கருணாநிதி, எம்.ஜி. ஆர்., ராஜிவ் ஆகியோர் அழிக்க நினைத்தனர். நாங்கள் தடைகளை உடைத்து வளர்ந்துவிட்டோம். தமிழகத்தில் உள்ள இரண்டரை கோடி வன்னியர் களை யாரும் அடக்க முடியாது. வன்னியர்கள் போர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் திருப்பித் தாக்கினால் எங்கள் எதிரில் நிற்க யாருக்கும் தகுதி கிடையாது. நாங்கள் எந்த ஜாதிக்கும் எதிரானவர்கள் கிடையாது. எங்களிடம் மோத எந்த பலசாலியும் கிடையாது. சாலை மறியலின் போதே நாங்கள் போலீசாரை திருப்பித் தாக்கியவர்கள். காவல்துறைக்கு பயந்த ஜாதியல்ல நாங்கள். எங்களை தாக்கினால் திருப்பி தாக்குவோம். போலீசாரை பார்த்து ஓடுகிற ஜாதியல்ல நாங்கள். காவல்துறைக்கு சட்டப் படி அடிக்கிற உரிமையில்லை. அப்படி அடித்தால் நாங்களும் சட்டப்படி திருப்பி அடிக்க தயங்கமாட்டோம். தைலாபுரத்தில் நடந்த சம்பவம் போல் எங்கள் மாவட்டத்தில் நடந்திருந்தால் போலீசார் திரும்பி போய் இருக்க மாட்டார்கள். ஆளுங்கட்சிக்கும், ஒரு அரசியல் கட்சிக்கும் (விடுதலை சிறுத்தை) ஆதரவாக காவல்துறை நடந்து கொண்டால், எங்கள் மக்களை காப்பாற்ற வன்னியர் சங்கம் நேரடியாக களத்தில் இறங்கும். ஒட்டுமொத்த வன்னியர்களும் பா.ம.க.,வில் இருந்தால் நம்மை யாராலும் ஜெயிக்க முடியாது. வடதமிழகத்தில் 60 சதவீதத்திற்கு மேல் வன்னியர்கள் உள்ளனர். ஆரம்பத்தில், "வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை' என்று சொன்னோம். ஆனால், தற்போது, வன்னியர் ஓட்டு வன்னியருக்கே இல்லை. அன்னியர் ஓட்டும் வன்னியருக்கு இல்லை என்ற நிலைமை உள்ளது. நாட்டில் 1 சதவீதம் பேர் உள்ள இசைவேளாளர் வகுப்பைச் சேர்ந்த கருணாநிதி முதல்வராக உள்ளார். இவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வராக உள்ளார். ஆனால், இரண்டு கோடி பேர் உள்ள வன்னியரில் யாரும் முதல்வராக முடியவில்லை. திருமாவளவன் சென்னையில் பேசும் போது, "முன்பு பா.ம.க., எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெறமுடியும் என்ற நிலைமை மாறியுள்ளது. தற்போது, விடுதலை சிறுத்தை எந்த அணியில் இருக்கிறதோ அந்த அணி தான் வெற்றி பெறும்' என்றும் கூறியுள்ளார். யார் பலசாலி என்று தெரிந்து கொள்ள, வரும் 2011 சட்டசபை தேர்தலில் எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டு எந்த கட்சிக்கு பலம் என்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு காடுவெட்டி குரு . .. ..பேசினார்.