Wednesday 23 November 2011

கமல்ஹாசன் ஜோர்டான் பயணம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
விஸ்வரூபம் படத்துக்காக அப்படத்தின் கதாநாயகி பூஜா குமார் மற்றும் படக்குழுவினருடன் உலகநாயகன் கமல்ஹாசன் ஜோர்டான் பயணமானார்.

நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் தானே இயக்கி, தயாரிக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
முன்னதாக இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. 40% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்தக் கட்ட காட்சிகளை ஜோர்டானில் படமாக்கவுள்ளனர்.
ஜோர்டானின் நடந்த முதல் தமிழ்ப்படபிடிப்பு கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படமாகத்தான் இருக்கும். அடுத்த 15 நாட்களுக்கு படக்குழுவினர் விஸ்ரூபம் திரைப்பட காட்சிகளை ஜோர்டானில் படமாக்கவுள்ளனர்.
படத்தின் சில முக்கிய காட்சிகளும் இரண்டு பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளன.
தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கனடாவுக்கான விசா மறுக்கப்பட்டது. இதனையடுத்து விஸ்வரூபம் படக்குழு தற்போது ஜோர்டான் நாட்டை முற்றுகையிட்டுள்ளது.

0 comments: