Wednesday 15 December 2010

பாரம்பரியச் சின்னங்களான பிரமிட், தாஜ் மஹால் இனி பணக்காரர்களுக்கே

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

விரைவில் உலக பாரம்பரியச் சின்னங்களான பிரமிட், தாஜ் மஹால்,
வெனிஸ் உள்ளிட்டவைகளுக்கு பணம் படைத்தவர்கள் மற்றும் பிரபலங்களால் மட்டும் தான் செல்ல முடியும் என்ற நிலை உருவாகவுள்ளது.
உலக பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அவை சுற்றுலாப் பயணிகளின் அதீத பயன்பாட்டால் அழிந்துவிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியூச்சர் லபாரட்டரி தயாரித்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இனி வரும் காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டும் பாரம்பரிய சின்னங்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும். மற்றவர்கள் சில இடங்களை மட்டும் சுற்றிப் பார்க்கலாம் என்று அது கூறியுள்ளது.
இதேபோல, இங்கிலாந்தில் இருக்கும் நேஷனல் டிரஸ்ட் உடைமைகளைப் பார்க்க அரசு போக்குவரத்தில் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பியூச்சராலஜிஸ்ட் அமைப்பின் இயன் பியர்சன் இதுகுறித்துக் கூறுகையில்,
தற்போது நாம் இஷ்டத்திற்கு உலக பாரம்பரியச் சின்னங்களுக்கு செல்கிறோம். இனி வரும் காலத்தில் நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று பார்க்க முடியாது.
முக்கிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும். பணக்காரர்களால் மட்டுமே டிக்கெட் வாங்கமுடியும். அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படும்

0 comments: